அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர- ஆண்டியாகல பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில், புதையல் தோண்டச் சென்ற 07 சந்தேக நபர்களை நேற்று (21) அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்துள்ளதாக, மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில், 06 பேர் களுத்துறை, தொடங்கொட, தெஹியோகித ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் திருகோணமலை -திவுல்வெவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, இவர்களிடமிருந்து ஜெக்னேட்டர் வெடிமருந்து 400 கிராம், துளையிடுவதற்கு பயன்படுத்தப்படும் றில் மெசீன் 01, பூசை உபகரணங்கள் போன்றனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள், காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உலாவுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சுற்றி வளைப்பினை மேற்கொண்ட போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதாக சந்தேக நபர்கள், மொறவெவ பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் குறிப்பிட்டனர்.
Post Top Ad
Saturday, December 22, 2018
புதையல் தோண்டச் சென்ற எழுவர் கைது
Tags
East#
Trincomalle#
Share This
About vettimurasu
Trincomalle
Tags:
East,
Trincomalle
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.