மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 4000 ஆயிரம் அங்கத்துவ பெண்களையும் 2000 ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை
கொண்ட காவியா பெண்கள் சுயதொழில்
நிறுவகத்தின் ஊடாக பயன்பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்ட பயனாளிகளின் வருடாந்த
ஒன்றுகூடல் நிகழ்வு காவியா பெண்கள் சுயதொழில் நிறுவகத்தின்
நிறைவேற்று பணிப்பாளர் திருமதி
.யோகமலர் அஜித்குமார் தலைமையில் மட்டக்களப்பு வை
எம் .சி எ மண்டபத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம
அதிதியாக மாவட்ட அரசாங்க மேலதிக அதிபர் சுதர்ஷினி சிறிகாந்த் கலந்துகொண்டார் .
நிகழ்வில் அதிதிகளாக கோரளைப்பற்று
தெற்கு ,கிரான் பிரதேச செயலாளர் எஸ் .ராஜ்பாபு , மட்டக்களப்பு கூட்டுறவு
அபிவிருத்தி உதவி ஆணையாளர் .கே .பி .தங்கவேல் காவியா பெண்கள்
சுயதொழில் நிறுவகத்தின் ஆலோசகர் ஆர்
சிவபிரகாசம் வர்த்தக சம்மேளன இணைப்பாளர்
கே .குகதாஸ் மற்றும் இந்நிகழ்வில் காவியா பெண்கள்
சுயதொழில் நிறுவகத்தின் உத்தியோகத்தர்கள் , பயனாளிகள் , பாடசாலை
மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்
வருடாந்தம் நடைபெறும்
பயனாளிகளின் ஒன்றுகூடல் நிகழ்வில் கலாசார நிகழ்வுகளும் , காவியா பெண்கள் சுயதொழில் நிறுவனத்தின் ஊடாக பயன்பெறும்
பயனாளிகளின் குடும்பம்களின் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு
பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.