தேர்தலில் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தேர்தலில் வாக்களித்தது இல்லை என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களை தெளிவூட்டும் நிகழ்வு ஜூன் 12 ஆம் திகதி தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தெனியாய 51 ஆவது சந்தியில் இருந்து மக்களை தெளிவூட்டும் முகமாக ஊர்வலம் தொடங்கி, தெனியாய மத்தேயு பாடசாலைவரையும் சென்று முடிவடைந்தது.
தேர்தல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சித்திரப் போட்டியின் போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
மற்றும் மாத்தறை தேர்தல் செயலகத்தினால் ஆணையாளருக்கு ஞாபக சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.
இதன் போது உரையாற்றிய மகிந்த தேசப்பிரிய, மக்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
தேர்தலில் நீங்கள் வாக்களிப்பதில்லையா? என இளைஞர் ஒருவர் கேட்டபோது,
‘யாரும் சிறையில் வைக்கப்பட்டு மரண தண்டணை விதிக்கப்படாவிட்டால், இலஞ்ச ஊழல் செயல்களுக்கு ஆளாகாது விட்டால், யாருடைய பெயரையும் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கமுடியாது. எனக்கு வாக்கு இருந்தது. ஆனால் நான் தேர்தல் ஆணையாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து வாக்களிக்க வில்லை.’
‘அதாவது 2011 ஆம் ஆண்டில் இருந்து வாக்களிக்கவில்லை. நான் விரும்பினால் வாக்களிக்கலாம். ஆனால் கட்சி சார்பாக வாக்களித்தேன் என்று நினைப்பார்கள். வாக்களிக்காவிட்டாலும் இவர் தகுதியானவர் இல்லை என்று சொல்வார்கள். இதற்காகத்தான் நான் வாக்களிக்கப் போவதில்லை,’ என்று தெரிவித்துள்ளார்.
Post Top Ad
Wednesday, June 20, 2018
7 வருடங்களாக வாக்களிக்காத தேர்தல் ஆணையாளர். காரணம் என்ன?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.