ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஜுன் 21 சர்வதேச யோகா தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக வியாழக்கிழமை 21.06.2018 மட்டக்களப்பு மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் காலை 6.30 மணிக்கு மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அவர்களின் பங்குபற்றுதலுடன் யோகா பயிற்சி இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழக செயலாளர் எல். தீபாகரன் தெரிவித்தார்.
இந்த ஏற்பாடு தொடர்பாக ஊடகங்களுக்குத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவதுளூ தமிழரின் ஆய கலைகள் அறுபத்து நான்கில் ஒன்றான யோகா கலையின் சிறப்பை உணர்த்தும் முகமாகவும் மட்டக்களப்பில் யோகா கலையை பிரபல்யப்படுத்தும் நோக்குடனும் மட்டக்களப்பில் சர்வதேச யோகா தினத்தை அனுஷ்டிக்கும் யோகா பயிற்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலானோரின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இதில் ஆர்வமுள்ள அனைவரும் இணைந்து கொள்ளலாம் என்றும் தீபாகரன் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.