மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நலன்புரி சங்கத்திற்கு கொட்டகைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வந்தாறுமூலை நலன்புரி சங்கம், களுவன்கேணி நலன்புரி சங்கம் ஆகியவற்றிற்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கொட்டகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் மற்றும் நலன்புரி சங்க பிரதிநிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.