Breaking

Post Top Ad

Friday, June 22, 2018

சர்வதேச யோகா தினம் சூரிய நமஸ்காரம்) பயிற்சி 2018.06.24 அன்று ஆரம்பம்

இலங்கைத்தீவில் உள்ள அனைத்து இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குமான யோகா (சூரிய நமஸ்காரம்) பயிற்சியினை செயற்படுத்தும் திட்டம் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இளம் சிறார்களுக்கு அவர்கள் மனம் ஏற்றுக் கொள்கின்ற வளரும் சிறு பருவத்திலேயே உயர்வான வாழ்வின் மதிப்பீடுகளை நன்கு கிரகித்துக் கொள்ளவும்  ஒழுக்கந்தரும் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும்  மனதிலும் உணர்ச்சிகளிலும் அறிவிலும் நீதிநெறி வழியிலும் ஆன்மீகத்திலும் மலர்ந்து விரிந்து முழுமையான ஆளுமைத் தன்மையை வளர்க்கவும் அவர்களது   இதயங்களில் உள்ள தெய்வீகத் தாமரையை மலரச்செய்வதற்கும் பயிற்சியளித்து   வழிகாட்டி   ஒழுக்க நெறிமுறை சார்ந்த சமூகத்தை உருவாக்கும் இலட்சிய நோக்குடன் இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தின் ஓரங்கமாக யோகா (சூரிய நமஸ்காரம்) பயிற்சியினை  இலங்கைத்தீவில் உள்ள அனைத்து இந்துசமய அறநெறிப் பாடசாலைகளுக்கும் செயற்படுத்தும் திட்டம் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.  


இந்துசமயஇ கலாசாரக் கற்கைகள் நிறுவகமூடாக யோகாசன வளவாளர்களாக இணைக்கப்பட்டுள்ள போதனாசிரியர்கள் மூலமாகவும் இந்துசமய அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களிற்கு  யோகாசனம் - சான்றிதழ்ப் பயிற்சிநெறியினை வழங்கி அவர்கள் மூலமாகவும்  முதற்கட்டமாக அனைத்து இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் சூரியநமஸ்காரம் பயிற்சியினை வழங்குவதற்குவதற்கும் தொடர்ந்து   அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகாசனம் - சான்றிதழ்ப் பயிற்சிநெறியினை  நடைமுறைப்படுத்துவதற்கும் இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைத்து இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குமான யோகா (சூரிய நமஸ்காரம்) பயிற்சியினை செயற்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் பிரதான வைபவம் எதிர்வரும் 24.06.2018 ஞாயிற்றுக்கிழமை காலை  7.45 மணிக்கு காரைதீவு கணகரெட்ணம் மைதானத்தில் இடம் பெறவுள்ளது.  சிவயோகச் செல்வர் சிவஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்கள் திருமுன்னிலையில்  ,  மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு செயலாளர் எந்திரி  . பொ. சுரேஷ் அவர்கள் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே.விமலநாதன் அவர்கள் கெளரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கவுள்ளார். அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகா (சூரிய நமஸ்காரம்) பயிற்சியினை செயற்படுத்தும் திட்ட த்தை ஆரம்பித்துவைக்கும் வைபவங்கள் ஏனைய சில மாவட்டங்களிலும் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages