இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மே மாதம் முதல் தற்போது வரை 20 சிறுவர்கள் இன்புளுவன்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இவ்வாறு உயிரழந்துள்ள சிறுவர்களில் 10 பேர் இருதயத்தில் துளை, மூலை வளர்ச்சி குறைவு, அங்கவீனமான மற்றும் வெவ்வேறான நோய்காரணங்களினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் என கண்டறிப்பட்டுள்ளது.
ஆகவே இவ்வாறான சிறுவர்களுக்கு விரைவில் இன்புளுவன்சா நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனினும் தற்போது தென்மாகாணத்தில் இன்புளுவன்சா தொற்றுநோய் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் சப்ரகமுவ மாகாணத்தில் இன்புளுவன்சா பரவுவதற்கான வாய்ப்பில்லை. இருப்பினும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இன்புளுவன்சா தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதால் அம் மாகாணத்தில் முழுமையாக வைரஸ் தொற்று பரவுவதை குறைப்பதற்கான எச்சரிக்கையும் வைத்திய ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.