Breaking

Post Top Ad

Monday, June 18, 2018

கிழக்குத் தமிழர் ஒன்றியம் பொதுக்கூட்டம்

(படுவான் எஸ்.நவா)

போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கிழக்கு தமிழர் ஒன்றிய ஒன்றுகூடல் பொதுக்கூட்டம் தலைவர் யோகநாதன் தலமையில் வெல்லாவெளி கலாச்சார மத்திய நிலையத்தில் (17)  இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது போரதீவுப்பற்று பிரதேசத்தில் கிழக்கு தமிழர் ஒன்றிய நிருவாகத்தெரிவு இடம்பெற்றது. தலைவராக பேரிம்பநாயகம் (மேலதிக மாவட்ட பதிவாளர் செயலாளராக எஸ்.வினோ பொருளாளராக எஸ்.பரமானந்தராசா பிரதேச சபை உறுப்பினர் உபதலைவராக பா.வரதசாஜன் பட்டிருப்பு கல்வி வலய உதவிப் பணிப்பாளர் உபசெயலாளர்களாக எஸ்.கீதா மற்றும் ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவிலும் ஒரு பிரதிநிதியினை தெரிவுசெய்தனர்.
இந்நிகழ்வில் இணைப்பாளர்களான சிவநாதன் சிரேஸ்ட சட்டத்தரனியும் பதில் நீதவானும், செங்கதிரோன் .கோபாலகிருஷ்ணன் பேராசிரியர் மா.செல்வராசா,  Dr.அருளானந்தம், திரு.யோகநாதன் தலைவர் கிழக்கு தமிழர் ஒன்றியம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசம் திரு.சீவரெத்தினம் விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் கல்வி மான்கள் கிராம அமைப்புக்களின் தலைவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.













No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages