மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க முகக்கவசங்கள் வழங்கிவைப்பு
(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க இலவசமாக முகக்கவசங்கள் இன்று (வியாழக்கிழமை) வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது வௌிக்களத்தில் பொது மக்களுக்கு அத்தியவசிய சேவைகளை வழங்கும்போது இந்த கொரோனா தொற்று நோய் தொடர்பில் உத்தியோகத்தர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதுடன் மக்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது தொடர்பில் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில்மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு முகக்கவசங்களை உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் வழங்கிவைத்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.