மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் சேவையாக கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பமானது.
(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்திக் கொடுப்பனவுகளை நடமாடும் சேவையாக கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம் இன்று வியாழக்கிழைம ஆரம்பமானது.
பிரதேச செயலாளர், மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக இத் திட்டம் இங்குள்ள 24 கிராமசேவகர் பிரிவுகளிலும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
சமுர்த்தி வங்கிகளில் பல கிராமங்களைச் சேர்ந்த மக்களும் ஒரே நேரத்தில் பணம் பெற ன்றுகூடுவதால் கொரோனா தொற்று நோய் பரவ சந்தர்பம் ஏற்படும் என்ற காரணத்தால் அம் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு மற்றும் பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவு முதியோர்களுக்கான கொடுப்பனவு ஆகியவற்றை வௌிக்கள உத்தியோகத்தர்கள் வழங்க ஆரம்பித்துள்ளனர்.
இச் செயற்திட்டத்தினை பிரதேச செயலாளர் எஸ்.சதாகர், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள்உள்ளிட்டோர் கிராமம் கிராமமாக சென்று கண்ணகாணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.