மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை(02) நிகழ்வுகள் ஆரம்பமானது.
இதன்போது கல்லூரியின் ஸ்தாபகரும் முன்னாள் பராளுமன்ற உறுப்பினருமான அமரர் வ.நல்லையாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியபின் நிகழ்வுகள் ஆரம்பமானது.
தொடர்ந்து இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கல்லூரியின் கொடி அதிபர் இரா. சண்டேஸ்வரனால் ஏற்றப்பட்டதையடுத்து கல்லூரியில் இதுவரை கல்விகற்று மரணித்த மற்றும் கடமையாற்றி மரணித்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பாடசாலை கீதமும் இசைக்கப்பட்டது.
இன்றைய இன் நிகழ்வின்போது ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், தற்போது கல்வி பயிலும் மாணவர்கள் அடங்கலாக ஆறு அணிகள் தெரிவு செய்யப்பட்டு 08 ஓவர் கொண்ட மென் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட இந்துக் கல்லூரியின் அதிபர் இரா. சண்டேஸ்வரன், பிரதி அதிபர் கு.பாஸ்கரன், பழைய மாணவர் சங்கத் தலைவர் ரீ. மதன், சங்கத்தின் செயலாளர் மாணிக்கப்போடி சசிகுமார், கல்லூரியின் பழைய மாணவரும் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளருமான என்.தனஞ்செயன் மற்றும் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினம் நாளையதினம் திங்கட்கிழமை கல்லூரி நிருவாகத்தாலும், பழைய மாணவர் சங்கம், பாடசாலை,கல்வி அபிவிருத்தி சங்கம் மாணவர்கள் போன்றோரால் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.