Breaking

Post Top Ad

Sunday, February 2, 2020

கிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.



கிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால்   புதிய பிரமாணக் குறிப்பு  உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில்  நடைபெற்றது.

(எஸ்.சதீஸ்)

கிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் ஆசிரியர்களின் புதிய பிரமாணக் குறிப்பு மற்றும்  சம்பள ஏற்றம் உள்ளிட்ட சுற்றறிக்கை தொடர்பான செயலமர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.


கிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எரிர்மனசிங்கம் பிரியகாாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்எஸ். ஜெயராஜா, மாவட்டஆசிரியர் சங்கத்தின்  செயலாளர் எம்.சற்குணலிங்கம்,  இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதி ஏ.வீ. கமால்டீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இச் செயலமர்வில் புதிய பிரமாணக் குறிப்பு விடயம்,  சம்பள ஏற்றம், லீவு விடயம், புகையிரத சீட்டு விடயம், தாபன பிரமானம் உள்ளிட்ட விடயங்கள் பற்றி தௌிவுபடுத்தப்பட்டது.

இதன்போது வளவாளராக எஸ். செந்தூரன் கலந்துகொண்டு மேற்படி விடயங்கள் பற்றி இங்கு வருகைதந்த ஆசிரியர்கள்,அதிபர்களுக்கு விளக்கமளித்தார்.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages