கொழும்பில் இருந்து சட்டவிரோதமான முறையில் மட்டக்களப்பிற்கு சங்குகளை கடத்திவந்தபோது குறித்த சங்குகளுடன் நபர் ஒருவரையும் மட்டக்களப்பு பொலிஸார் சனிக்கிழமை 18ம் திகதி கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தருகில் நபர் ஒருவர் பெட்டி ஒன்று்ன் சென்றபோது காவல்துறையினர் அவரை விசாணை செய்தபோது அங்கு சட்டவிரோதமான முறையில் கடத்திவந்த சங்குகள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் அறியமுடிகின்றது.
இதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.குமாரசிறி மற்றும் மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கெட்டியாராச்சி ஆகியோர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று சந்தேக நபரையும் சங்குகளையும் மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.