Breaking

Post Top Ad

Thursday, January 16, 2020

கல்குடா கல்வி வலயத்திலுள்ள கோரகல்லிமடு ஶ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு



கல்குடா கல்வி வலயத்திலுள்ள   கோரகல்லிமடு ஶ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை  16ம் திகதி சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் என்.ஆனந்தன்  தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,  கல்குடா கல்வி அலுவலகத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.குணலிங்கம்,   பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது முதலாம் தர மாணவர்களை தற்போது இரண்டாம் தரம் கல்வி பயிலும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் மாலை அணிவித்து  பாடசாலைக்கு வரவேற்கப்பட்டனர்.

மாணவர்கள் வரவேற்பின்போது பாடசாலை மண்டபத்தில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றது.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages