Breaking

Post Top Ad

Thursday, January 16, 2020

கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு


(எஸ்.சதீஸ்)


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு வியாழக்கிழமை (16ம் திகதி பிற்பகல் ) மட்டக்களப்பில் இடம்பெற்றது.


ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வெல்லாவெளியில் அமைந்துள்ள மட்டு.அம்பாறை மாவட்டச் செயலகத்தில் அக்கட்சியின் உப தலைவர் நா.நகுலேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மகாணாசபை உறுப்பினர் மார்கண்டு நடராசா, இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர், ப.சாந்தன், மட்டக்களப்பு மாவட்ட நிருவாகச் செயலாளர் நா.தீபன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.



இதன்போது பொதுச்சுடரினை பா.அரியநேத்திரன் ஏற்றிவைக்க, மலர்மாலையை மா.நடராசா அணிவித்தார், பின்னர் மலரஞ்சலி செலுத்தப்பட்டு, அகவணக்கமும் இடம்பெற்றதைத் தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெற்றன.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages