Breaking

Post Top Ad

Sunday, December 8, 2019

வௌ்ளத்தால் துண்டிக்கப்பட்ட பிரதேச மக்கள் அடிப்படை ஆகாரங்கள் குறைந்த நிலையில் காட்டுயானைகளின் தெல்லையுடன் வாழுகின்ற மக்களுக்கு விஷேட கவனம் தேவை - ஶ்ரீநேசன் MP தெரிவிப்பு

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிக்காக வழங்கப்பட்ட 2.8 மில்லியன் நிதியுதவி போதுமானதாக இல்லை என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் துண்டிக்கப்பட்ட நிலப் பிரதேசத்தில் வாழும் மக்கள் அடிப்படை ஆகாரங்கள் குறைந்த நிலையில் காணப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து   ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் ​மேலும் குறிப்பிடுகையில்,

கிரான், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வௌ்ளத்தால் துண்டிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் காட்டுயானைகளின் தெல்லை, போக்குவரத்து பிரச்சனைகளுடன்  வாழுகின்ற மக்களாக காணப்படுவதால் இம் மக்கள் தொடர்பில் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தவேண்டிய தேவை உள்ளது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 10738 குடும்பங்கள் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பாதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்  ஏற்பட்டுள்ளது. இதேவேளை இம் மாவட்டத்தில் 18 நலன்புரி முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.


மழை வௌ்ளத்தால் பல துன்பங்களை அனுபவித்துவரும் மக்களுக்கு தற்போது  வழங்கப்பட்ட 2,8 மில்லியன் நிதியுதவி போதுமானதாக இல்லை  என கருதுகின்றேன் எனவே இம் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உடனடியாக மேதிக நிதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்  சிறிநேசன்  தெரிவித்தார்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages