Breaking

Post Top Ad

Tuesday, December 10, 2019

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட பன்மைத்துவம் தொடர்பான பயிற்சி மட்டக்களப்பில்



(எஸ்.சதீஸ்)

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட பன்மைத்துவம் தொடர்பான பயிற்சி நெறி மட்டக்களப்பு கல்லடி தனியார் விடுதி ஒன்றில்  அண்மையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் செயலமர்வில்  முகாமைத்துவ ஆலோசகர் ஜெபமாலைமுத்து பெனடிக்ற் வளவாளராக  பங்குபற்றியதுடன் மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி, ஏறாவூர் நகர சபைகள், ஏனைய பிரதேச சபைகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இதன்போது  சட்டத்தரணி கே.ஐங்கரன், முகாமைத்துவ ஆலோசகர் ஜெபமாலைமுத்து பெனடிக்ற்  போன்றோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

இதன்போது, பன்மைத்துவத்துடன் இணைந்ததாக சமாதானம், இன, மத ஒற்றுமை, இன ஒற்றுமை மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.


பிரதேசங்களில் நிரந்தர அமைதியையும் அபிவிருத்தியையும் கொண்டுவருவதற்கு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊடாக அவர்களது கிராம மக்களுக்கும் பன்மைத்துவம், இன நல்லிணக்கம் சமாதானம், அபிவிருத்தி போன்ற விடயங்களை ஊட்டுவதற்காக இவ்வாறான செயலமர்வுகள் நடைபெற்று வருவதாக இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார்.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages