Breaking

Post Top Ad

Wednesday, December 25, 2019

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கும்புறுமூலை மக்களுக்கு சுவின்டன் தமிழ் சங்கத்தின் உதவியில் அஹிம்சா நிறுவனால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட    கும்புறுமூலை   மக்களுக்கு  சுவின்டன் தமிழ் சங்கத்தின் உதவியில் அஹிம்சா நிறுவனால் உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கிவைப்பு

தொடர் அடைமழை மற்றும் வெள்ள அனர்த்தத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  கும்புறுமூலை கிராம மக்களுக்கு  சுவின்டன் தமிழ் சங்கத்தின் உதவியில் அஹிம்சா சமூக நிறுவனால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.



 இதன்போது கும்புறுமூலை கிராமத்தைச்  சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 135 குடும்பங்களுக்கு சுவின்டன் தமிழ் சங்கத்தின் நிதி பங்களிப்பில் மட்டக்களப்பு அஹிம்சா சமூக நிறுவனத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.


கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் தலைமையில் அஹிம்சா சமூக நிறுவன நிறைவேற்று தலைவர் வி.விஜயராஜா, கிராமசேவகர் அஹிம்சா சமூக நிறுவன செயலாளர், உறுப்பினர்கள், மாதர்சங்க உறுப்பினர்கள்,இராவணா விழையாட்டுகழக உறுப்பினர்களால்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages