Breaking

Post Top Ad

Thursday, December 26, 2019

மட்டக்களப்பு விஞ்னான வழிகாட்டிகள் அமைப்பினால் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான வசதிகளை ஏற்படுத்தினர்.

 

மட்டக்களப்பு விஞ்னான வழிகாட்டிகள் அமைப்பினால் வியாழக்கிழமை  காலை நாட்டில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான வசதிகளை செய்து வழங்கினர்.

இந்த சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்ப்பது கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் இதனால் இக் கிரகணத்தை தொலைநோக்கி மற்றும் இலத்திரணியல் கருவிகள் ஊடாக பார்ப்பதற்கான ஏற்பாடுகளை  மட்டக்களப்பு விஞ்னான வழிகாட்டிகள் அமைப்பினரால் செய்து வழங்கப்பட்டிருந்தது.




இதன்போது இந்த இந்த சூரிய கிரகணத்தைப் பற்றிய விளக்கமும் வழங்கப்பட்டது.


இக்  கிரகணத்தைப் பார்வையிடுவதற்காக பாடசாலை மானவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும்  வருகைதந்து பார்வையிட்டனர்.


இலங்கை நேரப்படி காலை 8.09 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11.21 வரை இக் கிரகணம் இடம்பெற்றதாக ஆதர்சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages