மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை 26ம் திகதி தேசிய பாதுகாப்பு தினத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
வியாழக்கிழமை 26ம் திகதி காலை 8.55 மணி அளவில் மட்டக்களப்பு கல்லடி டச்பார், திருச்செந்தூர், நாவலடி ஆகிய பகுதிகளில் சுனாமி நினைவேந்தல் நிகழ்கள்(15வது ஆண்டு) நடைபெற்றன.
இதில் பிரதான நினைவஞ்சலி அனிஷ்டிப்பு நிகழ்வாக திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜேசப் பொன்னையா ஆண்டகை, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.