Breaking

Post Top Ad

Sunday, December 22, 2019

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழக இளம் வீரர்களுக்காக பல லட்சம் ரூபாய்க்கான கிரிக்கெட் உபகரணம் புலம்பெயர்ந்தோரால் கையளிப்பு



 (மட்டக்களப்பு விஷேட நிருபர்)

 மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் புலம்பெயர்ந்து வாழும் அங்கத்தவர்களினால் பல லட்சம் ரூபாய் பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்களை   சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கோட்டைமுனை EPP அமைப்பினரிடம் கையளிக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்குடன் புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர்களினால் வழங்கப்பட்டது.



இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக பந்து வீச்சு இயந்திரம் ஒன்றும் பயிற்சிக்காக கையளிக்கப்பட்டதுடன், 50 கடின பந்து துடுப்பாட்ட மட்டைகள், நூற்றுக்கணக்கான கடின பந்துகள், புள்ளிக்கணிப்பு மட்டைகள், பாதணிகள், தலைகவசங்கள், கையுறைகள் என பல பொருட்களை   வழங்கிவைக்கப்பட்டது.

மேற்படி பொருட்களை புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான பு.வசீகரன் வழங்கிவைத்தார்.



இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் பே.சடாற்சரராஜா, பொருளாளர் கு.தயாசிங்கம், செயலாளர் பா.ஜெயதாசன், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் இ.சிவநாதன்,செயலாளர் சா.அருள்மொழி மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்வின் போது வவுணதீவு பிரதேசத்திலுள்ள பன்சேனை பாடசாலையின் உதைபந்தாட்ட வீராங்கனை ஒருவருவர்    கழகத்தில்  அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டதுடன் அம் மாணவியின்  கல்வி நடவடிக்கைக்காக  இ.ரவீந்திரனால்  துவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்ட்டது.


 மட்டக்களப்பில் 48 வருட வரலாறு கொண்ட கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் இவ்வாறான பொருட்கள்  இளம் வீரர்களுக்காக  ஒரேதடைவையில் வழங்கப்பட்டது அங்கத்தவர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியளிப்பதாக கழக நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages