(வவுணதீவு நிருபர் )
ஊழல் அற்ற ஜனநாயக ஆட்சியை இந்த நாட்டில் கொண்டுவருவதற்கு மக்கள் அனைவரும் ஓர் அணியில் நின்று எமது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் கரங்களை பலப்படுத்த வேண்டும், அதேபோன்று 71 ஆண்டுகால நிதி மோசடி மற்றும் ஊழல் நிறைந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேன்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு சனிக்கிழமை மாலை (09) மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா, மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி பிரபு, ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் போன்றோர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதம செயலாளர் டில்வின் சில்வா, ஊழல், இனவாதப் பேச்சுடைய நபர்கள் எமது கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறானவர்கள் நாட்டையும், மக்களையும் சீரழிப்பதற்கு பொதுஜன பெரமுன கட்சிக்குயுடன் இணைந்து செயற்படுகின்றனர்.
இந்த நாட்டில் ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திரக் கட்சியும் தமது ஆட்சியில் மக்களை கடன் சுமையில் ஏற்படுத்தி பாதாளத்தில் தள்ளியுள்ளனர். இப்போது சுதந்திரக் கட்சியினர் பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்து மீண்டும் மக்களை ஏமாற்ற எத்தணிக்கின்றனர்.
கடன் சுமையைத் தாங்கி பாதாளத்தில் இருக்கும் எமது மக்களை மீட்டு வருங்கால சந்ததியினருக்கான நியாயமான ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்க தைரியத்துடன் ஒன்றுசேர வேண்டும் என நான் அழைப்பு விடுக்கின்றேன்.
கடந்தகால ஆட்சியாளர்கள் இந்த நாட்டுக்காக என்ன செய்தார்கள், மக்களுக்காக என்ன செய்தார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இந்த அழிவுப் பாதையில் இருந்து விடுபட்டு ஒரு புதிய வெற்றிகரமான அரசியல் பயணத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும். என தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.