(வவுணதீவு நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் சனிக்கிழமை 9ம் திகதி தமிழரசு கட்சியை விட்டு வௌியேறி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது கருத்தினை வௌியிட்டுள்ளார்.
பாலசிங்கம் முரளிதரன் எனும் மேற்படி பிரதேச சபை உறுப்பினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி யுடன் இணைந்து பொதுஜன பெரமுன கட்சிக்கு தனது ஆதரவினை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து இவர் கருத்துத் தெரிவிக்ைகயிில்,
வாகரை பால்சேனை வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதேச சபை உறுப்பினராக இருந்தபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி போன்றவற்றில் ஏற்பட்ட அதிருப்பியால் கட்சியை விட்டு வௌியேறவேண்டிய நிலை ஏற்பட்டது.
இதேபோன்று யுத்தத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட எமது வாகரைப் பிரதேசத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் எதுவும் செய்துதர முடியவில்லை, எமது பிரதேச சபைக்கு ஒரு அமைச்சரை அழைத்து எமது குறைகளை தெரிவிப்பதற்காவது சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரவில்லை. இவ்வாறான நிலையில் அந்த கட்சியுடன் இருந்து பயன் இல்லாத காரணத்தால் தான் நான் வௌியேறியுள்ளேன்.
இதற்காக எனக்கு தமிழரசுக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் நான் நான் தொடர்ந்தும் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி யுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளேன். என தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.