Breaking

Post Top Ad

Tuesday, September 24, 2019

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கேணியின் அருகில் தேரரின் பூதவுடல் தகனம் செய்ததும் சட்டத்தரணிகளை தாக்கியமையும் கண்டிக்கத்தக்கது - சிறிநேசன் MP


முல்லைத்தீவு, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கேணியின் அருகில் காலமான பௌத்த  தேரரின் பூதவுடல் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தகனம் செய்யப்பட்டதும், சட்டத்தரணிகளை தாக்கிய செயலும்  கண்டிக்கத்தக்கது   என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.


​செவ்வாய்கிழமை (24ம் திகதி) காலை தனது அலுவலகத்தில் வைத்து முல்லைத்தீவு  சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.


மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.



 நீதி மன்றத்தினை அவமதிக்கும் வகையில் எமது சட்டத்தரணிகளை தாக்கி ஞானசாரர் தலைமையிலான பிக்குமார் இச் செயலை செய்துள்ளமை தமிழ், இந்து மக்களை அவமதிக்கும் செயல் எனவும் இதன்போது  பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், ஞானசார தேரர் இதற்கு முன்னரும் நீதிமன்றத்தை அவமதித்து சிறைவாசம் இருந்துள்ளார். சிறையில் இருந்த ஞானசார தேரரை ஜனாதிபதியே பொது மன்னிப்பு வழங்கி, எதிர்காலத்தில் இவரால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது எனும் வகையில் இவர் விடுவிக்கப்பட்டார்.

முல்லைத்தீவில் நடந்த இந்த சமபபவத்திற்கு ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார் என்பதை நான் உட்பட எமது மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்..

 அமைதியாக பேசச் சென்ற சட்டத்தரணிகளை மிகவும் கீழ்தரமாக தீய வார்த்தையில் பேசியுள்ளதுடன் அவர்களை தாக்கியும் உள்ளனர். இந்த சம்பவங்களை வைத்து பார்க்கும்போது இலங்கையில் நீதி எவ்வாறு உள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரின் இந்த செயற்பாடுகளுக்கு சட்டத்தையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் பொலிஸார் வேடக்கை பாத்த்துக்கொண்டிருந்தார்களா? என்பதையும் நான் கேட்கின்றேன்.

எனவே நீதித்துறை, நீதிமன்றம் இதற்கு சரியான தீர்ப்பை வழங்கி எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேன்டும் என கேட்டுக்கொள்வதுடன் இந்து மக்களை அவமானப்படுத்தும் வகையில் செயற்பட்ட சம்பவத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன். என தெரிவித்தார்.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages