கடந்த 2018 ஆம் ஆண்டில் தையல், ஐசிங்கேக், கைப்பணிப் பொருட்கள் மற்றும் உடை அலங்காரம் போன்றவை தொடர்பான ஒரு வருட டிப்ளோம் பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகளே இக் கண்காட்சியிலும் விற்பனை நிகழ்விலும் ஈடுபட்டனர்.
கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அரசகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம். பிரேம்குமார், திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆடைகள், அலங்காரப் பொருட்கள், ஓவியங்கள், கேக், கைப்பணிப் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.
இப்பயிற்சிகளை நிறைவுசெய்த 25யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.