பாதீனியம் எனும் ஒருவகை புல்செடி திருகோணமலையில் மிக வேகமாக பரவி வருகிறது , இதனாலேயே திருகோணமலையை அழகுபடுத்தும் மான்கள் பெருவாரியாக இறக்கின்றன என நம்புவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்."அதைவிட மக்களுக்கு ஒவ்வா நோய்களும் வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மான்களுக்கு தண்ணி தொட்டி கட்டுவதைப்போல் இந்த விடயத்திலும் மிகக் கூடிய அக்கறை செலுத்தி இப் பாதினியத்தை அழித்தால் மான்கள் இறப்பு குறையும்.
காற்றின் முலம் இதன் மகரந்தம் அதிகம் பரவிவருகின்றது, திருகோணமலை கோட்டை யை அண்டிய பகுதியிலிருந்து காளிகோவிலடி இந்துகல்லுரி மைதானம் மட்டும் மிக அடத்தியாக பரவி விட்டது" .
எனவே நகரசபை (உள்ளுராட்சி ) மன்றங்கள் இதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.