பொலிசாரால் தடுத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் மீது ஹையஸ் மோதி விபத்து: ஒருவர் பலிபளைப் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பொலிசாரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் ஹையஸ் வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் வாகனமொன்றை கொள்வனவு செய்ய, பணம் செலுத்திவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஹையேஸ் வாகனத்தை செலுத்தி வந்தவருக்கு அருகிலிருந்த மீசாலை மேற்கை சேர்ந்த பேருந்து சாரதி ஸ்தலத்தில் பலியானார் என தெரியவருகின்றது. ஹையேசை செலுத்தி வந்தவரும் பிறிதொருவரும் காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.