இளைஞர் ,யுவதிகளுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழக கல்வி
தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது
கல்வி பொது சாதாரண தரம் மற்றும் உயர்தர கல்வியினை
நிறைவு செய்து மேலதிக கல்வியினை தொடர முடியாத இளைஞர் ,யுவதிகளுக்கு புலமைப்பரிசில்
திட்டத்தின் ஊடாக வெளிநாட்டு பல்கலைக்கழக கல்வியினை தொடர பாத்வே சர்வதேச நிறுவனம்
நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது
இதன் கீழ் கிழக்குமாகாண இளைஞர் யுவதிகளுக்கான புலமைப்பரிசில்
திட்டத்தின் ஊடாக வெளிநாட்டு பல்கலைக்கழக கல்வியினை தொடர்வது தொடர்பான தெளிவூட்டல்
செயலமர்வு பாத்வே சர்வதேச நிறுவன பணிப்பாளர் அகமட் அசிப் தலைமையில் மட்டக்களப்பு
கல்லடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது
கிழக்குமாகாண இளைஞர் யுவதிகளுக்காக நடைபெற்ற பல்கலைக்கழக கல்வி தொடர்பாக தெளிவூட்டும் செயலமர்வில் பாத்வே சர்வதேச பல்கலைக்கழக நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர்
சகில் அகமட் ஸாகிஹ் , கிழக்கு பிராந்திய
இணைப்பாளர் மொகமட் நிராஸ் மற்றும்
கிழக்குமாகாண இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.