ஏறாவூர் நகர சபையின் பெண் உறுப்பினரான றஸ்மியா இஸ்ஹாக் (வயது 46) சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 23.12.2018 மரணமாகியுள்ளார்.
ஏறாவூர் முகாந்திரம் வீதியைச் சேர்ந்த இவர் ஏறாவூர் நகர சபையின் தற்போதைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான பொதுப் பட்டியல் வேட்பாளாராகத் தெரிவாகி நகர சபை அமர்வுகளில் பங்கெடுத்தார்.
மூன்று பிள்ளைகளின் தாயான இவரின் ஜனாஸா நல்லடக்கம் ஏறாவூர் காட்டுப்பள்ளிவாயல் அடக்கஸ் தலத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் உட்பட ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.