இலங்கை தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் பெயரில் இன்றும் வடமராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக செய்திகள் தொிவிக்கின்றன.
தமிழீழ விடுதலை புலிகளின் உத்தியோகபூா்வ இலட்சினையுடன் “மதிப்பிற்குறிய தமிழீழ மக்களுக்கு..” என விழித்து இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த சுவரொட்டிகளில் தமிழ் மக்கள் சமூக பிறழ்வு நடத்தைகளில் ஈடுபட கூடாது. எனவும் அவ்வாறு நடத்தைகளில் ஈடுபடுபவா்கள் திருந்தி வாழவேண்டும் எனவும், அதனை செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் எழுதப்பட்டு தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவு என உரிமை கோரப்பட்டுள்ளது.
இதேபோல் நேற்றும் சிவப்பு நிற கடதாசியில் துண்டு பிரசுரங்கள் பருத்துறை பகுதியில் ஒட்டப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.