ஆந்திர மாநிலத்தின் கடப்பாவை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (32). இவர் மனைவி கங்கா தேவி (29). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆஞ்சநேயலு கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சொந்த ஊருக்கு வருவார்.
அப்படி இரு மாதங்களுக்கு முன்னர் மனைவி மற்றும் குழந்தைகளை காண ஊருக்கு வந்தார்.
அப்போது மனைவி கங்காதேவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது தொடர்பாக அடிக்கடி இருவரும் சண்டை போட்ட நிலையில் இரு தினங்களுக்கு சண்டை முற்றியது.
அப்போது ஆத்திரமடைந்த ஆஞ்சநேயலு தன்னிடம் இருந்த சுத்தியலால் கங்காதேவியின் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தார்.
இதை கங்காதேவியின் தாய் மல்லம்மா (48) தடுக்க முயன்ற நிலையில் அவரையும் அடித்துள்ளார்.
இதில் காயமடைந்த மல்லமாவை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கங்காதேவியின் சடலத்தை கைப்பற்றிவிட்டு ஆஞ்சநேயலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.