இயேசு பாலன் பிறப்பு நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று கிறிஸ்மஸ் பண்டிகையை
கொண்டாடி வருகின்றன
மட்டக்களப்பு
மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இயேசு பாலன் பிறப்பு நிகழ்வினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ்
பண்டிகை விசேட திருப்பலி ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது.
இயேசு பாலன்
பிறப்பு நத்தார் விசேட திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர்
பொன்னையா ஜோசப் தலைமையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்றது
மட்டக்களப்பு
மரியாள் பேராலய பங்கு தந்தை சி வி
அன்னதாஸ் , அருட்தந்தை எலக்ஸ்
,அடிகளார் ஆகியோர் இணைந்து திருப்பலியினை ஒப்புகொடுத்தனர் .
இந்த
திருப்பலியின் போது நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படவும், சிறைச்சாலைகளில்
தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் விடுதலை வேண்டியும் நாட்டு
மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ விசேட பிரார்த்தனைகள் ஆயரினால் நடாத்தப்பட்டது.
இந்த
வழிபாட்டில் சர்வமத தலைவர்கள் , சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,மட்டக்களப்பு
மரியாள் பேராலய உதவி பங்குதந்தையர்கள் சிறைச்சாலை
அதிகாரிகள் , சிறைச்சாலை தண்டனை
கைதிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.