இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில், இந்நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவுப் பேருரையினையும் நிகழ்கால அரசியல் நிலை தொடர்பான உரையினையும் ஏ.எம்.சுமத்திரன் ஆற்றினார்.
இதன்போது அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்தூவி, தீபச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
புனித மரியாள் பேராலயத்தில்வைத்து கடந்த 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் தின திருப்பலி வழிபாட்டின்போது ஜோசப் பரராஜசிங்ம் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார், இக் கொலையாளிகள் அரசாங்கத்தால் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.





No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.