தமிழ் அரசியல் கைதிகளின் ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அவர்களை குற்றவாளிகளாக கருத முடியாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அருட்தந்தை சக்திவேல் உள்ளிட்ட குழுவினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து, தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்க முடியாது என தெரிவித்த சி.வி.விக்கினேஸ்வரன்
நீதி அமைச்சர் தலதா அத்துகோரல கூறிய கருத்து தவறானது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
நாட்டில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என நீதி அமைச்சர் தெரிவித்திருப்பது தவறு என்றும் சி.வி.விக்கினேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல் காரணத்திற்காக ஒரு பிரத்தியேகமான சட்டத்தின் கீழே அவர்களை கைது செய்துள்ளதாகவும் சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த பிரத்தியேக சட்டத்தில் இருக்கின்றதன் அடிப்படையில், இவர்கள் குற்றவாளிகளாக முடியாது என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post Top Ad
Friday, October 12, 2018
Home
North
Sri lanka
ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து, கைதிகளை குற்றவாளிகளாக்க முடியாது -சி.வி.விக்கினேஸ்வரன் .!!
ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து, கைதிகளை குற்றவாளிகளாக்க முடியாது -சி.வி.விக்கினேஸ்வரன் .!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.