வெவர்லி தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை இருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று வேவர்லி தோட்ட பொது மைதானத்தில் இருந்து காலை 9.00 மணிக்கு உண்ணாவிரதம் இருப்பவர்களில் ஒருவர் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு டயகம, தலவாக்கலை பிரதான பாதைக்கு கொண்டு செல்லப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தினால் டயகம, தலவாக்கலை பாதையூடான போக்குவரத்துக்கு சில மணித்தியாலங்கள் தடைப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அக்கரப்பத்தனை பொலிஸார் போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தாதவாறு போராட்டத்தை நடத்துமாறு கோரிய நிலையில் போராட்டக்காரர்கள் சவப்பெட்டியை பாதை ஓரத்தில் வைத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், கிளாஸ்க்கோ தோட்டத்தின் மூன்று பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வேவர்லி தோட்டத்தின் ஐந்து பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் தொழில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.