தற்பொழுது நடைபெறும் க.பொ.த உயர்தர பரீட்சையில் வினாவுக்கு பதிலளிக்கும் போது கையடக்க தொலைபேசியை வைத்திருந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைகள் பரீட்சை நிறைவடைந்த பின்னர் ஆரம்பமாகும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
அதுவரையில் அனைத்து மாணவர்களுக்கும் எந்தவித தடையும் இன்றி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பரீட்சை எழுத சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் சம்பந்தப்பட்ட விசாரணையில் இவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் இவருக்கு எதிராக தண்டனை வழங்கப்படும்.
சம்பந்தப்பட்ட மாணவர் கம்பஹாவை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
Tuesday, August 14, 2018
தொலைபேசியுடன் பரீட்சைக்கு சென்ற மாணவன் தொடர்பில் விசாரணை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.