மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 247 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதி அமைச்சின் 2017ஆம் ஆண்டுக்கான நீதித்துறை செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதியில் இருந்து 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மரணதண்டனை வழங்கப்பட்ட 247 பேருக்கே இவ்வாறு ஜனாதிபதியால் மரண தண்டனையில் இருந்து பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கேற்ப 34 மரண தண்டனை கைதிகளுக்கு 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதியிலும், 83 மரண தண்டனை கைதிகளுக்கு 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியிலும், 70 மரண தண்டனை கைதிகளுக்கு 2016ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதியிலும், மேலும் 60 மரண தண்டனை கைதிகளுக்கு 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியிலும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மரண தண்டனையில் இருந்து ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள மேற்படி கைதிகளுக்கு அவர்களின் மரண தண்டனையை ஆயுட்கால சிறைத்தண்டனையாக மாற்றுவதற்கு முன்னாள் நீதி அமைச்சரால் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கேற்பவே ஆயுட்கால சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது
Post Top Ad
Wednesday, July 18, 2018
மரணதண்டனை கைதிகளில் 247 பேருக்கு பொது மன்னிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.