இந்த ஆண்டின் கடந்த அரையாண்டு காலத்தில் கலால் குற்றங்கள் சம்பந்தமாக 25,214 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கலால் திணைக்களம் கூறியுள்ளது.
சுமார் 1000 கலால் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடையே சட்டவிரோதமான முறையில் மதுபான தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டமை சம்பந்தமாக 19,145 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெரோய்ன் உட்பட போதைப் பொருட்களை உடமையில் வைத்திருந்தமை சம்பந்தமாக 3081 பேர் மற்றும் புகையிலை சம்பந்தமான குற்றச்சாட்டில் 3463 பேர் கைது செய்யப்பட்டதாக கலால் திணைக்களம் கூறியுள்ளது.
அதேநேரம் கலால் அனுமதிப்பத்திரம் பெற்ற இடங்களில் இடம்பெற்ற குற்றங்களிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தக் குற்றங்கள் குறைவாகவே பதிவாகியிருப்பதாக அந்த திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
Post Top Ad
Wednesday, July 18, 2018
மதுவரிக் குற்றங்கள்- அரையாண்டில் 25,214 பேர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.