காரைதீவு நிருபர் சகா -
கிழக்கிலங்கையின் கிழக்கின் மூத்ததமிழறிஞர் இறுதி வித்துவான் எனக்கருதப்படும் கல்முனை பாண்டிருப்பைச்சேர்ந்த வித்துவான் கனகரெத்தினம் ஞானரெத்தினம் (வயது 84) கனடாவில் காலமானார்.
கனடா சுவாமி விபுலானந்தா கலை மன்றத்தின் காப்பாளர்களுள் ஒருவராகத்திகழ்கிறார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டத்தைப் பூர்த்திசெய்த இறுதி வித்துவானாக இவர் கருதப்படுகின்றார். அதன்பிறகு இவ்வித்துவான் பாடநெறி பல்கலைக்கழகத்தால் நிறுத்தப்பட்டமை தெரிந்ததே.
கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் நீண்டகாலம் ஆசிரியராக பிரதி அதிபராக சேவையாற்றிய வித்துவான் க.ஞானரெத்தினம் கல்முனையின் குறிப்பிட்ட கால கல்வி வளர்ச்சியில் பிரதான பங்காற்றியிருந்தார்.
பிரபல எழுத்தாளரான இவர் இலங்கை வானொலியில் கல்விச்சேவை கிராமியசேவைகளில் நேரடியாக தொகுத்துவழங்கியுள்ளார். அது தவிர பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.
1990களில் புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறியவராவார். இவருக்கு பிள்ளைகளாக 2ஆண்களும் 2பெண்களும் உள்ளனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.