Breaking

Post Top Ad

Wednesday, June 20, 2018

துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம்; பகீரங்கப்படுத்திய கருணா அம்மான்

இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்த அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளே தற்பொழுது இருப்பதாக முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார் 

இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்தவர்கள் பட்டியலில் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமசந்திரன், ஜனா ஆகியோரும் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

டெலோவும் புளொட்டும் ஈபிஆர்எல்எப் ஆகியன தங்கள் போராட்டத்தை காட்டிக்கொடுத்த துரோகிகள் என்றும் இவர்களை துரோகிகள் என்று துரத்தி துரத்தி சுட்டோம் என்றும் என்னை துரோகி என்று சொல்ல இவர்களுக்கு தகுதி இல்லை என்றும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages