(BIRUNTHAVAN)
இந்துசமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கோடு இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதம்இ இந்துசமய அறநெறிக் கல்விக் கொடிதினம் ஆகியன 'இளஞ்சிறார்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு அறநெறிக்கல்வி தேவையென உணர்வீர்' எனும் தொனிப்பொருளில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் குருபூசைத் தினமாகிய மே மாதம் 31 ஆம் திகதியை ஆரம்ப நாளாகக்கொண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை இந்துசமயஇ கலாசார அலுவல்கள் திணைக்களத்தாற் தேசிய அறநெறி விழாவாக நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதில் ஓர் அங்கமாகமண்முனை வடக்கு பிரதேச செயலகமும், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய தேசிய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு நிகழ்வானது கடந்த 17.06.2018ம் திகதி காலை 8.00மணிக்கு காந்திகிராமம் சிவனாலயத்தில் இருந்து ஆரம்பமாகி கொக்குவில் கண்ணகி அம்மன் ஆலயத்தினை அடைந்து பின்னர் சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தில் நிறைவுபெற்றது. இதன்போது காந்திகிராமம் சிவனாலய அறநெறிப்பாடசாலை, இருதயபுரம் மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப்பாடசாலை, கொக்குவில் அறநெறிப்பாடசாலை, சத்துருக்கொண்டான் காயத்திரி அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சறோஜினி பாலசுந்தரம், நாவற்குடா இந்துகலாசார நிலைய இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.நே.பிருந்தாபன், திருமதி.மிதுலா கமலேந்திரன் மற்றும் அறநெறிப்பாடசாலைகளின் ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.