Breaking

Post Top Ad

Friday, June 22, 2018

திருத்த வேலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நரிப்புல்தோட்டம்-பன்குடாவெளி பாதை(தோணி)சேவை மீன்டும் ஆரம்பமாகியது.




(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச சபையினரால் நரிப்புல்தோட்டத்தில் இருந்து பன்குடாவெளிக்கு செல்வதற்காகா பாதை(தோணி)சேவை இடம்பெறுகின்றது.
இந்த பாதைசேவை திருத்த வேலை காரணமாக 18.06.2018 ஆம் திகதி தொடக்கம் 22.06.2018 ஆம் திகதி வரை நடைபெற மாட்டாது என மண்முனை மேற்கு பிரதேச சபையினரால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அறிவிக்கப்பட்டதற்கு அமைவாக இன்று (22.06.2018) மீன்டும் பாதைசேவை ஆரம்பமாகியது.

இந்த பாதைசேவை இடம்பெறும் இடத்திற்கு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா,  உப தவிசாளர் பொ.செல்லத்துரை ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages