Breaking

Post Top Ad

Thursday, June 21, 2018

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண்! பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த நபர்களே இந்த கொலையினை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கணவனைப் பிரிந்து வாழும் நிலையில், கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக இருந்துள்ளார்.

அந்த பெண் வேலை செய்யும் வீட்டில் வைத்தே நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டே குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ இந்த கொலையை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து கோப்பாய் மற்றும் கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages