மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு எம்.ஜே.எப் லயன்ஸ் (306 C2) கழகத்தின் அனுசரணையில், தொழில்நுட்ப நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இப் போட்டியில் எச்.என்.டி.ஏ அணி, எச்.என்.டி.ஐ.ரி அணி,எச்.என்.டி.ரி.எச்.எம் அணி மற்றும் எச்.என்.டி.ஈ ஆகிய நான்கு அணிகள் பங்குகொண்டன.
இப்போட்டியில் இறுதிச் சுற்றில் எச்.என்.டி.ஏ அணி கூடிய புள்ளிகளைப் பெற்று 1ஆம் நிலைக்குச் சென்று சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது.
2ஆம் இடத்தினை எச்.என்.டி.ரி.எச்.எம் அணியினரும், 3ஆம் இடத்தினை எச்.என்.டி.ஐ.ரி அணியும் பெற்றுக்கொண்டது.
இப் போட்டியில் சிறந்த ஆட்ட நாயகநாக யோராசா மிதுர்சன் தெரிவுசெய்யப்பட்டதுடன், சிறந்த தடுப்பாட்ட நாயகநாக விஜயகுமார் நிதுசன் தெரிவானார்.
வெற்றிபெற்ற வீரர்களுக்கு அதிதிகளால்,சான்றிதழ்கள் பதக்கங்களுடன் அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு எம்.ஜே.எப் லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன். என்.புஸ்பாகரன் - MJF, உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன், தொழில்நுட்ப நிறுவகத்தின் விரிவுரையாளர்கள், லயன்ஸ் கழக நிருவாக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.