Breaking

Post Top Ad

Friday, June 22, 2018

இ.த.ஆ.சங்கத்தின் பொதுச்செயலாளரின் நிதி மோசடி விசாரணை வேண்டும்.

இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேற்கொண்டுள்ள நிதிமோசடி தொடர்பில் வடக்கு முதலமைச்சரும்,கல்வி அமைச்சரும் விசாரணை ஒன்றை நடத்தவேண்டும. என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பட்டிருப்பு கல்விவலய செயலாளர் சு.கமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

பட்டிருப்பு கல்வி வலயக்கூட்டமானது பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பலதரப்பட்ட கடிதஙகள் ஊடாக என்னை பிழையாக சித்தரித்துவருகின்றார். என்னுடன் இருக்கும் தனிப்பட்ட கோபத்தினை வைத்துக் கொண்டு சங்கரீதியாக என்னை பலவீனப்படுத்த நினைக்கின்றார். என்னை பலவீனப்படுத்தினால் அவர்செய்தபிழைகள் மூடிமறைக்கப்பட்டுவிடும் என்று பகற்கனவு காண்கின்றார்.
என்னுடன் இவர் தனிப்பட்ட முறையில் முரண்படக் காரணம் இவரால் வெளியிடப்படும் வெற்றித் தேர்வு வினாத்தளினை விற்றுத்தரும்படி கூறியிருந்தார். அதற்கு நான்மறுப்புத்தெரிவித்தேன் தொல்லைப்படுத்தியதால் அதனை விற்பனை செய்து கொடுத்தேன் சங்க பொதுச்செயலாளர் என்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு என்னை அடிமைப்படுத்தினார். இதனால் அவரிடம் நான் முரண்பட்டுக்கொண்டேன். இதுதான் உண்மை

இந்த தனிப்பட்ட கோவத்தினை வைத்தக்கொண்டு என்னை சங்கத்தில் இருந்து ஓரங்கட்டுவதற்காக பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். என்னை சங்கத்தில் இருந்து நிறுத்தியுள்ளதாகவும் கூறியிருக்கின்றார். நான் இனிமேலும் பொறுமையாக இருக்க முடியாது சங்க உறுப்பினர்களுக்கு சில உண்மையான விடயங்களை நான் கூறியே ஆகவேண்டும்.
இவர் சங்கத்திற்கு பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை அவருடன் வேறு ஒருவரை சேர்த்துக்கொண்டு கள்ள கையொப்பம் இட்டு உறுப்பினர்களின் பணத்தினை சங்க விதிமுறைகளுக்கு முரணாக வங்கிகளில் இருந்து கையாடி சொந்த தேவைகளுக்காக பல இலட்சம் ரூபாய்க்களை நாசம் செய்துள்ளார். இது தொடர்பில் வடக்கு முதலமைச்சர் நிதி குற்றவியல்பிரிவுக்கும் அறிவிக்கவுள்ளேன். இவ்வாறு சங்கத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு எனமீது விரல் நீட்டுகின்றீரா?

சங்கத்திற்கென நேர்வே அமைப்பொன்றினால் வழங்கப்பட்ட ஒருகோடி ரூபாய் பெறுமதியான ப்பேரடோ வாகனத்தை அவரின் சொந்த போருக்கு எழுதிவைத்துள்ளார். ஆனால் அந்த வானத்திற்கான செலவு சங்கப்பணத்திலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுமாத்திரமா வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருந்தும் பணபெற்று வந்துள்ளதாக அறியமுடிகின்றது. மஹிந்த ஆட்சிகாலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராடியபோது யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு ஆளுங்கட்சி அமைச்சரிடம் சுயசலுகை பெற்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைவிட்டவர் அல்லவா நீங்கள். நீங்கள் எவ்வாறு ஆசிரியர் நலன்பற்றி கதைப்பது.

அண்மையில் நீங்கள் மேற்கொண்ட கூத்துக்கள் எல்லாம் இணையத்தளங்களில் வெளிவந்திருந்தது கிழக்குமாகாண கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தின்போது இடமாற்;றத்தினை பெற்று கொடுத்துவிட்டு ஆசிரியர்களிடம் லஞ்சம் வாங்கியமைக்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

சங்க சொத்துக்களையும் பதவியையும் கையளிக்காமல் மாகாண சபைத்தேர்தல், உள்ளுராட்சி தேர்தல் போன்றவற்றில் போட்டியிட்டு கிழக்கில் போட்டியிடும் போது நான் கிழக்ககாண்டா வடக்கில் போட்டியிடும் போது நான் வடக்காண்டா என்று மாறுவேடம் போட்டு மாகாணங்களுகிடையில் பிரிவினையை உருவாக்கி அதில் குளிர்காய்ந்து கொண்டு இருக்கும் நீங்கள் என்னைப்பற்றி எவ்வாறு பிழை கதைக்கமுடியும்? அதுமாத்திரமா தேர்தலின்போது சங்கத்தின் வாகனம் சங்கத்தின் பெயர் என்பனவற்றை பிழையாக பாவித்து ஒரு வட்டாரத்தில் வெல்லமுடியாத நீங்கள் தமிழர் ஆசிரியர் சங்த்திற்கு செயலாளரா? என ஆசிரியர்கள் கேலிசெய்யும் அளவிற்கு நீங்கள் உள்ளீர்கள் என்பதனை புரிந்து கௌ;ளுங்கள்.

நீங்கள் நினைத்த நேரம் தேர்தல் கேட்டுவிட்டு நினைத்த நேரம் சங்கத்தில் வந்து இணைந்து கொள்வதற்கு இது உங்கள்விட்டுச் சொத்தா? தற்போது நீங்கள் சங்கத்pன் செயற்பாடுகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளீர்கள் தலைவரின் கைகெயொப்பம் இன்றியும் சங்கம் பதிவு செய்யாமலும் எவ்வாறு நீங்கள் சேவையில் இருந்து விடுவிக்கப்படுவீர்கள் இதற்காக அதிகாரிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும. உங்களது இத்தகைய செயற்பாடுகளால் அரசியல்வாதிகள், அதிகாரிகள், மதப்பெரியார்கள் மத்தியில் சங்கமான மதிப்பிழந்தள்ளது. என்பதனை நீங்கள் அறிவீர்களா அன்பான ஆசிரியர்களே இந்த பொய்முகத்தின் முகத்திரையை நீங்கள் கிழிக்கவேண்டும் இதனைக் மறைப்பதற்காக எமது தமிழருக்கென்று இருக்கின்ற ஒரோயொரு சொத்தும் இல்லாமல் போய்விடும். வடக்கு மாகாண முதலமைச்சரே,கல்வி அமைச்சரே இது தொடர்பில் விசாரணை ஒன்றை நடாத்துவதற்கு முன்வரவேண்டும். உங்களது ஆட்சியின் கீழ் சங்கம் புடம்போடப்பட வேண்டும் என அன்பாக நான் கேட்டுக்கொள்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages