Breaking

Post Top Ad

Tuesday, June 19, 2018

வங்கிக் கடனை வசூலிக்க வந்த அதிகாரியைப் பார்த்து ஓடிய பெண்ணிற்கு நடந்த விபரீதம்

கொடுத்த வங்கிக் கடனைப் பெற்றுக் கொள்ள வந்த அதிகாரியைப் பார்த்து ஓடி பெண் மின்சார வேலியில் சிக்குண்டு காயமடைந்த நிலையில் திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட மீள்குடியேறிய கிராமத்திலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திருகோணமலை நகரை அண்மித்த பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மூன்று பெண் பிள்ளைகளின் தாயாரான 33 வயதுடைய பெண் வாராந்தம் எட்டாயிரம் ரூபாய் வீதம் பெறப்பட்ட பணத்தை கட்டும் நோக்கில் இரண்டு இலச்சம் ரூபாயை லோன் அடிப்படையில் பெற்றுள்ளார்.
வழமை போல ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அப்பணம் அறவிடப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த சனிக்கிழமை அப்பணம் செலுத்தப்படவில்லையெனவும் அதனால் இன்றைய தினம் அவரது வீட்டுக்கு அப்பணத்தை அறவிடுவதற்காக லோன் வழங்குநர்கள் சென்றுள்ளனர்.

இதேவேளை வீட்டில் கணவர் வங்கிக் கடன் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தேடி வந்த அதிகாரியினால் கோபம் கொண்டு தனது மனைவியின் தொலைபேசி இலக்கத்தையும் அவர் சென்றுள்ள இடத்தையும் வழங்கியுள்ளார்.

அதேவேளை லோன் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
இதேவேளை வீட்டு கதவு திறந்திருந்த நிலையில் வௌியில் வராததையடுத்து வீட்டுக்கு பின்னால் சுற்றிப்பார்த்த அதிகாரிகள் பெண்னொருவர் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் மயங்கிக்கிடந்த பெண்னை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் யானை மின் வேலியில் மோதுண்டமையினாலேயே தான் தூக்கி எறியப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலை தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages