மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் விஷேட அமைர்வு இன்று வியாழக்கிழமை (21) தவிசாளர் நாகமணி கதிரவேல் தலைமையில் நடைபெற்றது.
சபையின் அமர்வில் பார்வையாளர்கள் கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்து அதனை முகநூலில் பதிவிட்டுவதாக கடந்த அமர்வில் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் மீண்டும் மீண்டும் பார்வையாளர்கள் சபை அமர்வு நடவடிக்கைகளை வீடியோ எடுப்பதாக குற்றம்சாட்டி பார்வையார்களை வெளியேற்றுமாறு உறுப்பினர்கள் கோரிகை முன்வைத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட தவிசாளர் சபையின் அனுமதியின்றி நுளைந்த பார்வையாளர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். இனிவருங்காலங்களில் சபை அமர்வுகளுக்கு பார்வையாளர்கள் வருகைதருவதாயின் மூன்று தினங்களுக்கு முன்பு அனுமதி பெறவேண்டும் என உத்தரவிட்டார்.
பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்பு வெளியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் வ.சுரேந்திரன் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். அதனையடுத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். இதையடுத்து 10 நிமிடங்கள் சபை ஒத்திவைக்கப்பட்டு மீதமுள்ள உறுப்பினர்களுடன் சபை அமர்வு மீண்டும் நடைபெற்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.