Breaking

Post Top Ad

Thursday, April 26, 2018

ஹபாயா அணியக் கேட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!!

 கொழும்பு கல்வி அமைச்சினால் தீர்வு வழங்கப்படும் வரை ஹபாய அணிவதற்கு அனுமதி கோரிய, சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.



ஹபாயா விவகாரம் தொடர்பாக வலயக்கல்வி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை சிறி சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஹபாய அணிவதற்கு அனுமதி கோரிய விவகாரம் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

ஒவ்வொரு மதத்துடைய கலாச்சார விழுமியங்களை மதித்து
புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும். நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பாடசாலையின் சமய
கலாச்சாரம் பேணப்பட வே்ண்டும்.

ஆசிரியர்கள் பாடசாலைக்குப் பொருத்தமான, பாடசாலையால் தீர்மானிக்கப்பட்ட உடைகளை அணிய வேண்டும் என்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

இதேவேளை இந்த விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages