Breaking

Post Top Ad

Thursday, April 26, 2018

தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அதன் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.



இதன்போது தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு தந்தை செல்வா அறக்காவலர் சபையின் தலைவர், தந்தை செல்வாவின் புதல்வர், யாழ். மாநகர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் மாலை அணிவித்தனர்.

அத்துடன் தந்தை செல்வா நினைவுச் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தந்தை செல்வாவின் நினைவுப் பேருரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages