(மட்டக்களப்பு விஷேட நிருபர்)
மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழத்தின் புலம்பெயர் அங்கத்தவர்களின் உதவியால் மட்டக்களப்பு சிற்றி லக்கி விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் முகமாக வலைப்பயிற்சி மையம் இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினரும் கழகத்தின்தின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமாகிய மல்கம் டிலிமா, கோட்டைமுனை விளையாட்டு கழத்தின் புலம்பெயர்ந்து வாழும் அங்கத்தவர்களின் பிரதிநிதியான பு.வசீகரன், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தவைலர் இ.சிவநாதன், செயலாளர் சா.அருள்மொழி, சிற்றிலக்கி விளையாட்டு கழகத்தின் தலைவர் அ.மகேந்திரராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழத்தின் அங்கத்தவர்களின் நிதி உதவியில் இந்த வலைப்பயிற்சி மையம் அமைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டினை மேலும் ஊக்குவிக்கும் முகமாக இந்த பயிற்சி மையம் அமைக்கப்பட்டதாக கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.